Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களுக்கு எங்கள் சிறுநீரை தருகிறோம்: வாட்டாள் நாகராஜின் தரம்கெட்ட பேச்சு

தமிழர்களுக்கு எங்கள் சிறுநீரை தருகிறோம்: வாட்டாள் நாகராஜின் தரம்கெட்ட பேச்சு

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (15:10 IST)
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதையடுத்து கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


 
 
தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ் திரைப்படங்களுக்கு தடை, தமிழக பேருந்துகள் செல்ல அனுமதியில்லை, தமிழ் சேனல்களுக்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தமிழர் விரோத போக்கை கடைபிடித்து வரும் கன்னடர்கள் தமிழர்களை தாக்குவோம் எனவும் மிரட்டல் விடுத்தனர்.
 
இந்நிலையில் காலம் காலமாக காவேரி தண்ணீர் பிரச்சணையில் வன்முறை வெறியாட்டங்களை தூண்டிவிடும் கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழர்களை பற்றி தரம்தாழ்ந்தி பேசியுள்ளார்.
 
இதுவரை 2,000 மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கர்நாடகா, கன்னட விவகாரங்களுக்காக சுமார் 10,000க்கும் அதிகமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
 
இன்று இவர் நடத்திய போராட்டத்தில் தமிழர்களுக்கு எங்கள் சிறுநீரை தருகிறோம், ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று தன்னுடைய சாக்கடையான வார்த்தைகளை கூறி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்துள்ளார். இதனை கன்னட மக்கள் கூட ரசிக்க மாட்டார்கள். தமிழர்களுக்கு எதிராக கன்னட மக்களை தூண்டி விடுவது இது போன்ற அரசியல் வியாதிகள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments