Webdunia - Bharat's app for daily news and videos

Install App

I.N.D.I.A - NDA இரண்டு கூட்டணியிலும் நாங்கள் இல்லை: சந்திரசேகர ராவ் அறிவிப்பு..!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (11:51 IST)
I.N.D.I.A மற்றும் NDA ஆகிய இரண்டு கூட்டணியிலும் நாங்கள் இல்லை என  தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். 
 
வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என இந்தியாவில் உள்ள பல எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
 
ஆனாலும் இதில் ஒரு சில முக்கிய கட்சிகள் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாயாவதி கட்சி, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சந்திரசேகர் ராவ் கட்சி, ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சி ஆகியவை முக்கியமானவை. 
 
இந்த நிலையில் I.N.D.I.A மற்றும் NDA ஆகிய 2 கூட்டணியிலும் நாங்கள் இல்லை என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். நாங்கள் இரண்டு பக்கமும் இல்லை, இரண்டு பக்கத்திலும் செல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் நாங்கள் தனியாகவும் இல்லை, எங்களுக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து மூன்றாவது அணி அணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments