Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு நிலச்சரிவு - இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி..! கேரளா அறிவிப்பு..!!

Senthil Velan
புதன், 14 ஆகஸ்ட் 2024 (14:01 IST)
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
 
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. 
 
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மேலும் பலர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. 

ALSO READ: செந்தில் பாலாஜி வழக்கு.! ED-க்கு மேலும் ஒரு வாரம் அவகாசம்.! உயர்நீதிமன்றம்..!!
 
நிலச்சரிவால் படுகாயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை: மாலத்தீவு அரசு அறிவிப்பு..!

தேசிய அளவில் மதுவிலக்கு.. முதல்வரை சந்திக்கும் முன் திருமாவளவன் பேட்டி..!

நாளை தொடங்குகிறது புரட்டாசி மாதம்: இன்றே திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்..!

இட்லி சாப்பிடும் போட்டி! தொண்டையில் இட்லி சிக்கிய பலியான நபர்! - கேரளாவில் சோகம்!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments