Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டலில் பாத்திரங்கள் கழுவியதைப் பெருமையாகக் கருதுகிறேன்: ஸ்மிருதி இரானி

Webdunia
புதன், 7 ஜனவரி 2015 (15:49 IST)
15 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாத்திரங்கள் கழுவியதை பெருமையாகவே உணர்கிறேன் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் இன்று நடைபெற்ற கல்வித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் 'உழைப்பின் கவுரவம்' பற்றி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பிளம்பராகவோ அல்லது மெக்கானிக்காகவோ இருக்கிறோம் என்று யாரும் தன்னைத் தாழ்வாக எண்ணக்கூடாது.
 
15 ஆண்டுகளுக்கு முன் நான் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாத்திரங்களை கழுவியதை ஒரு மத்திய அமைச்சரான நான் பெருமையாகவே உணர்கிறேன். இது குறித்து நான் வருத்தம் அடையவில்லை. ஏனெனில் நமது நாடு பல உயர்ந்த லட்சியங்களை கொண்டுள்ளது" என்றார்.
 
மேக் இன் இந்தியா முன்னெடுப்புகளை குறிப்பிட்டு பேசிய இரானி, திறமையான இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்று தொழிற்சாலைகள் ஆர்வமாக இருப்பதாகவும்,  நமக்கு திறமையான இந்தியா வேண்டுமானால், ஊழியர்களின் கண்ணியம் முக்கியமான அம்சமாகும். சமுதாயம் இதை அளித்தால் தொழிலாளர்களும் இந்த கண்ணியத்தை அடைவார்கள்" என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments