Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிஸ் பதான் சஸ்பெண்ட் - கே.எம். ஷெரிப் கடும் கண்டனம்

வாரிஸ் பதான் சஸ்பெண்ட் - கே.எம். ஷெரிப் கடும் கண்டனம்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2016 (06:30 IST)
வாரிஸ் பதான் சஸ்பெண்ட் செய்யப்பட் சம்பவம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய தலைவர் கே.எம். ஷெரிப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரத் மாதா கீ ஜெய்" என்று கூற மறுத்த மஹாராஷ்டிரா சட்ட மன்ற உறுப்பினர் வாரிஸ் பதான் இடை நீக்கம் அறிவுக்கு பொருந்தாததோடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். 
 
மேலும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி  மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாரிஸ் பதானை இடை நீக்கம் செய்ய வலியுறுத்தி உள்ளது.
 
இது போன்ற மத நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ள உணர்ச்சிவயப்பட்ட கோஷங்களை கொண்டு தேசப்பற்றை மதிப்பிடுவது அரசியலமைப்பு சட்டம் அளித்த மத சுதந்திரத்திற்கும், மத சார்பற்ற விழுமியங்களுக்கும் எதிரானது ஆகும். மேலும், வாரிஸ் பதான் மீதான நடவடிக்கையை உடனே  திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments