Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து மாதவிடாய் சோதனை நடத்திய ஆசிரியர்கள்: அதிரடி நடவடிக்கை!

மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து மாதவிடாய் சோதனை நடத்திய ஆசிரியர்கள்: அதிரடி நடவடிக்கை!

மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து மாதவிடாய் சோதனை நடத்திய ஆசிரியர்கள்: அதிரடி நடவடிக்கை!
, சனி, 22 ஜூலை 2017 (12:12 IST)
கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம் முஸாபர் நகரில் உள்ள கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் 70 மாணவிகளின் உடைகளை களைய சொல்லி அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்களது பெண்ணுறுப்பை சோதனை செய்துள்ளார் அந்த விடுதியின் வார்டனும், தாளாளருமான பெண் சுரேகா தோமர்.


 
 
பள்ளி விடுதியின் கழிவறையில் மாதவிடாய் இரத்தம் இருந்ததற்காக அங்கு தங்கியிருந்த மாணவிகள் 70 பேரில் யாருக்கு மாதவிடாய் ஏற்பட்டது என்பதை சோதனை செய்ய அவர்களை நிர்வாணப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் விடுதி காப்பாளர்.
 
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் மூலம் புகார் அளிக்கப்பட்டு அதில், மாணவிகள், தங்களது உடைகளை மனிதாபிமானமற்ற முறையில் விடுதியில் அகற்றினார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர். அந்த விடுதி காப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
 
நாடு முழுவதும் பரபர்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலாத்காரம் செய்ய முயன்ற கணவரின் உறுப்பை வெட்டி எறிந்த மனைவி