மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் வாக்குப்பதிவு ஆரம்பம்.. ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:32 IST)
இந்தியாவில் தற்போது ஐந்து மாநில தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஷ்கரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 70 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. சற்றுமுன் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் மத்திய பிரதேச மாநில மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

 மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் தற்போது விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 ஐந்து மாநிலங்களில்  பதிவான வாக்குகள் டிசம்பர் மூன்றாம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஐந்து மாநில தேர்தலை ஒரு மினி நாடாளுமன்ற தேர்தலாகவே அரசியல் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments