Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் - ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (07:44 IST)
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எட்டு மணிக்கு எண்ணப்பட்டு சுமார் 12 மணிக்கு முடிவுகள் தெரியவரும்.
கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின
 
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும், ஆர்.ஆர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டில் ஏராளமான போலி வாக்காளர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டதாலும் இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 222 தொகுதிகளில் பதிவாகிய ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, 12 மணிக்கு முடிவுகள் வெளியாக உள்ளன. பாஜக, காங்கிரஸ், மஜத இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்துக்கொண்டிருக்கிறது, ஏனென்றால் இத்தேர்தல் முடிவு தான் தான் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என கருதப்படுகிறது. எது எப்படியாயினும் கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments