Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயோ டீசல் ஆலையில் தீ விபத்து: இரண்டு நாட்களாக கொளுந்து விட்டு எரியும் தீ

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (16:26 IST)
விசாகப்பட்டினத்தில், பயோ டீசல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு நாட்களாக தீ கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது.
 

 
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள பயோமெக்ஸ் என்ற எரிபொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட தீ வித்தில், ஆலை தீப்பற்றிக் கொண்டது. 
 
விபத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயனைப்பு படையினர் 36 மணி நேரமாக போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 
 
மேலும், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மாநில அமைச்சர் சீனிவாச ராவ், தீ விபத்தில் தொழிலாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், தீ விபத்தால் ரூபாய் 120 கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
 
இதைத்தொடர்ந்து, ஆலையில் எரிபொருள் சேமிக்கப்பட்டு வைத்திருந்த 18 டாங்கில், 12 டாங் முதலில் தீப்பற்றியதாகவும், 18 டாங்கும் எரிந்தப் பின்னரே, தீ எரிவது அடங்கும் என்றும், மாவட்ட ஆட்சியர் யுவராஜ் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments