Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரேந்திர சேவாக்கை சந்தித்த சாக்‌ஷி மாலிக்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (20:56 IST)
இங்கிலாந்து பத்திரிக்கையாளர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நிலையை கேலி செய்ததற்கு பதிலடி கொடுத்ததால் சாக்‌ஷி மாலிக் சேவாக்கை நேரில் சென்று சந்தித்தார்.


 

 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சாக்‌ஷி மாலிக், கிரிக்கெட் வீரர் சேவாக்கை நேரில் சென்று சந்தித்தார்.
 
120 கோடி மக்களை கொண்ட இந்திய நாடு ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்கள் பெற்றதை கொண்டாடுவது அவமானகரமானது என்று இங்கிலாந்தின் பத்திரிகையாளரான பியர்ஸ் மோர்கன் டுவிட்டரில் கேலி செய்திருந்தார்.
 
அதற்கு கிரிக்கெட் வீரர் சேவாக், இந்தியர்கள் ஒவ்வொரு சிறு மகிழ்ச்சியையும் கொண்டாடுபவர்கள். கிரிக்கெட் போட்டியை கண்டுபிடித்த இங்கிலாந்து ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லாதது தங்களுக்கு அவமானமாக இல்லையா என்று பதிலடி கொடுத்தார்.
 
இதைத்தொடர்ந்து சாக்‌ஷி மாலிக், சேவாக்கை சந்திக்க நேரம் கேட்டு அவருக்கு டுவிட் செய்திருந்தார். அதற்கு சேவாக் நேரத்தை குறிப்பிடுகிறேன், ஆனால் என்னுடன் சண்டையிட கூடாது என்று கிண்டலாக பதிலளித்தார்.
 
அதன்படி சாக்‌ஷி மாலிக் சேவாக்கை நேரில் சென்று சந்தித்தார். பின்னர் சேவாக் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டோம், அவர் என்னுடம் சண்டை போடவில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments