Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் விராத் கோஹ்லியின் உண்மையான சிக்ஸர்! குவியும் பாராட்டுக்கள்

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (22:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி சிக்ஸர்களுக்கு சொந்தக்காரர் என்பது அனைவரும் அறிந்ததே. பேட் எடுத்து கொண்டு அவர் களத்தில் இறங்கினால் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்கும். இந்த நிலையில் ஒரு இந்தியனாக ஒரு சூப்பர் சிக்ஸர் அடித்துள்ளார் விராத் கோஹ்லி




 

ஆம், கடந்த ஆறு ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்த விராத் கோஹ்லி, கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில், பல கோடிகள் வருமானம் பெற வாய்ப்பு இருந்தும் மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாது என்று கூறிவிட்டார். பெப்சி நிறுவனம் மிகப்பேரிய தொகையை தருவதாக கூறியும், விராத் கோஹ்லி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில் ஒரு பொருளில் விஷத்தன்மை, சர்க்கரை அளவு அதிகம் இருக்கின்றது என்றால் அந்த பொருளை நான் கண்டிப்பாக உபயோகப்படுத்த மாட்டேன். நான் உபயோகப்படுத்தாத ஒரு பொருளுக்கு கண்டிப்பாக நான் பணத்திற்காக விளம்பரமும் செய்ய மாட்டேன்' என்று கூறியுள்ளார். இதுதான்யா, விராத்கோஹ்லி அடித்த உண்மையான சிக்ஸர்கள் என்று டுவிட்டரில் விராத் கோஹிலிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments