Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6ஆம் கட்ட தேர்தல்: விராத் கோஹ்லி, கவுதம் காம்பீர் வாக்களித்தனர்!

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (08:13 IST)
இன்று 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், திக்விஜய்சிங், சாத்வி பிரக்யாசிங் ஆகியோர் தொகுதிகளும் அடங்கும்
 
இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை சரியாக 7 மணிக்கே ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது வாக்கை பதிவு செய்தார். அவர் வாக்குப்பதிவிற்காக வரிசையில் நின்றது., வாக்களித்தவுடன் மை கறை உள்ள விரலை காண்பித்தது குறித்து புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 
அதேபோல் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளருமான கவுதம் காம்பீரும் இன்று காலை 7 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் போபால் தொகுதி பாஜக வேட்பாளரும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் அவர்களும் காலையில் ஓட்டளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெங்கு காய்ச்சலால் நர்சிங் படித்த பெண் உயிரிழப்பு.. வாலாஜாபேட்டை அருகே சோகம்..!

ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் தோல்வி.. 100 கிமீ உயரம் சென்றபோது வெடிக்க வைத்த விஞ்ஞானிகள்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. யார் யார்?

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments