Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா ஜெர்சி அணிந்து எம்எல்ஏ பதவியேற்ற தினேஷ் போகத்: குவியும் வாழ்த்துக்கள்.

Mahendran
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (18:00 IST)
சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில், மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வினேஷ் போகத்,  ஜூலானா தொகுதியில் சுமார் 6,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
 
இன்று சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்ற விழா நடைபெற்றது, இதில் இந்தியா ஜெர்சி அணிந்து வினேஷ் போகத், ஜூலானா தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் வினேஷ் போகத் பதக்கம் பெறும் வாய்ப்பு பறிபோனது என்பதும், இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, அவர் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற்று தற்போது அரசியல்வாதியாக உள்ளார்.
 
கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் வினேஷ் போகத் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஜூலானா தொகுதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments