Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை உயிருடன் எரிப்பு

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (15:09 IST)
குஜராத் மாநிலத்தில் 8 வயது சிறுமியை கொன்ற சிறுத்தையை, கிராம மக்கள் உயிருடன் எரித்துக்கொன்றனர்.


 

 
குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் உள்ள வடி என்ற கிராமத்தில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து 8 வயது சிறுமியை தாக்கியது. இதில் அந்த சிறுமி உயிரிழந்தார்.
 
பின்னர் அந்த சிறுத்தை அருகில் இருந்த காட்டு பகுதிக்கு தப்பிச்சென்றது. இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தை மாட்டிக்கொண்டதை அறிந்த கிராம மக்கள் கூண்டிற்கு அருகில் இருந்த வனத்துறையினரை அங்கிருந்து வெளியேர செய்தனர்.
 
சிறுமியை பலிக்கொடுத்த ஆவேசத்தில் இருந்த கிராம மக்கள், சிறுத்தை மீது மண்ணெண்ணை  ஊற்றி தீயிட்டனர். இதில் அந்த சிறுத்தை உயிரிழந்தது. 
 
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ரதோட் கூறியதாவது:-
 
சிறுத்தை எரிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் அளிக்கக்கூடிய அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

பச்சை புள்ளைன்னு பாக்கல.. அவன சுட்டுக் கொல்லணும்! சிறுமியின் தாயார் கண்ணீர்! - அமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments