Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான்-3 விண்கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது- இஸ்ரோ அறிவிப்பு

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (14:14 IST)
சமீபத்தில் சந்திராயன் 3 நிலவுக்கு அனுப்பப்பட்டு, நிலவை நெருங்கி வரும் நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின்  உந்துவிசைக் கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவில் தரை இறங்குவதற்கான அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளும் தயாராக இருப்பதாக  ஏற்கனவே இஸ்ரோ அறிவித்தது.

இந்த நிலையில், இன்று  நிலவின் தரைப்பகுதிக்கு நெருங்கி வந்தபோது, விக்ரம் லெண்டர் பிரிந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், சுற்றுவட்டப் பாதையில்,  விலக்கப்பட்டு  நிலவை நோக்கி லேண்டரின் பயணம் மாற்றப்படவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ கூறியது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments