Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் வேண்டாம் விஜய்யின் பஞ்ச் வசனம் போதும்: அதிசயமாக குணமாகி வரும் சிறுவன்

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (07:32 IST)
பிறவிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் நடிகர் விஜய்யின் வசனத்தைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி என்ற பகுதியில் செபாஸ்டியன் என்ற சிறுவன் பிறவியிலேயே வாய் பேச முடியாமல் இருந்து வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை
 
இந்த நிலையில் தற்செயலாக ஒரு முறை விஜய்யின் ’செல்பிபுள்ள’ ரிங்டோனை கேட்டவுடன் சிறுவனிடம் சிறிய மாற்றம் ஏற்படுவதை பெற்றோர்கள் கண்டனர். உடனடியாக இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவரிடம் கூற, அதனை தொடர்ந்து விஜய் படங்கள், விஜய்யின் பஞ்ச் வசனங்கள், விஜய்யின் பாடல்கள், விஜய் நடன காட்சிகள் ஆகியவற்றை செபாஸ்டியன் முன் போட்டுக் காட்டியுள்ளனர். இந்த படங்களையும் பாடல்களையும் பஞ்ச் வசனங்களை கேட்ட அந்த சிறுவன் மெல்ல மெல்ல எழுந்து நடப்பதாகவும் பேச முயற்சி செய்வதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
 
நடிகர் விஜயின் படங்கள் மூலம் பிறவியிலேயே மாற்றுத் திறனாளியாக இருந்த சிறுவன் ஒருவன் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய தொடங்கியது அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது மட்டுமின்றி பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments