Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரூபானி குஜராத் முதல்வராக பதவியேற்றார்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (15:30 IST)
குஜராத் முதல்வராக விஜய் ரூபானி 20 அமைச்சர்களுடன் இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் 182 இடங்களில், பாஜக 99 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில், உறுப்பினா்கள் அனைவரும் ஒருமனதாக விஜய் ரூபானியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தனர். இந்நிலையில், காந்திநகர் சச்சிவாலயா திடலில் விஜய் ருபானி இன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி பதவி பிரமாணம் செய்து வைத்தார். விஜய் ரூபானியை அடுத்து, துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்க்ள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments