Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மல்லையா சொத்து விவரங்களை ஏப்ரல் 21க்குள் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2016 (12:04 IST)
மனைவி, குழந்தைகள் மற்றும் தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



 

 
விஜய் மல்லையா எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் இருந்து 9 ஆபிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார்.
 
இந்த கடன்தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக அவருக்கு கடன் கொடுத்த அனைத்து வங்கிகளும் ஒன்றாக சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 
 
இந்நிலையில், விஜய் மல்லையா சார்பில் மார்ச் 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த அறிக்கையில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் அளித்த வங்கிகளுக்கு ரூ 4 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த விஜய் மல்லையா முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இது குறித்து, ஒருவாரத்துக்குள் பரிசீலித்து முடிவுசெய்யும்படி அவருக்கு கடன் அளித்த வங்கிகளை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
 
அத்துடன் இந்த வழக்கின் மறுவிசாரணை ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
 
அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, 4 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவித்த மல்லையாவின் கோரிக்கையை வங்கிகள் நிராகரித்தன.
 
மேலும், மனைவி, குழந்தைகள் மற்றும் தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களின் விவரங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில், மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments