Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திருடன், திருடன்” விஜய் மல்லையாவை கேவலப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (09:58 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியிடும் உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தை பார்க்க இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜய் மல்லையா ‘கிங் பிஷர்’ நிறுவனம் என்ற பெயரில் விமான சேவை, பீர் விற்பனை என பல தொழில்களை இந்தியாவில் நடத்தி வருகிறார். இந்திய வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாததால் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக இந்தியாவிலிருந்து லண்டன் தப்பி சென்ற மல்லையா தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அவரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இந்தியா இங்கிலாந்திடம் கேட்டிருந்தது. அதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார் விஜய் மல்லையா.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான உலக கோப்பை போட்டியை பார்ப்பதற்கு வந்திருந்தார் விஜய் மல்லையா. பிறகு அங்கு மைதானத்தில் வீரர்களுடன் போட்டோ எடுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த மக்கள் சிலர் ஹிந்தியில் ‘திருடன் திருடன்’ என கத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து வேகமாக விஜய் மல்லையா கிளம்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments