Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே சிறையில் விஜய் மல்லையா, நீரவ் மோடி – நாடுகடத்தல் எப்போது ?

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (10:48 IST)
இந்தியாவில் வங்கிகளில் பணமோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகிய இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா பல பொதுத் துறை வங்கிகளிடம் ரூ 9000 கோடியும் நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13500 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளனர். இவர்கள் இருவருமே இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இருவரில் விஜய் மல்லையா மட்டும் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நீரவ் மோடிக்கு மூன்று முறை ஜாமீன் மறுக்கப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் சிறையில் இருக்கிறார்.இவர்கள் இருவரையும் நாடு கடத்த அமலாக்கத்துறையும் சிபிஐயும் இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அப்படி இந்தியாவுக்கு அழைத்து வரும் பட்சத்தில் இருவரும் மும்பை ஆர்தர் ரோடு பராக் 12 சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள். தற்போது பராக் சிறையின் இரண்டு அறைகளில் ஒன்று காலியாகவும், ஒரு அறையில் மூன்று கைதிகளும் இருக்கின்றனர். இதில் நீரவ் மோடி அடைக்கப்படும் சிறை அறையில் அவருடன் மேலும் 3 பேர் அடைக்கப்படுவார்கள் என செய்தி நிறுவனமான பிடிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 வயது இளைஞரின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் ஊசிகளை அடித்த கணவன் - மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அதிமுக வாக்குகள் எந்த காலத்திலும் விஜய்க்கு போகாது: ஜெயக்குமார்

விஜயகாந்தை பார்த்து தான் சீமான், விஜய் கட்சி ஆரம்பித்துள்ளனர்: விஜய பிரபாகரன்

ஈஷா கிராமோத்சவத்தால் எங்க ஊர்ல பசங்க குடிப்பழக்கத்தை விட்டுட்டாங்க - ஒருசேரிபுதூர் பூபதி

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments