Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேனகாவுக்கு வாய்ப்பு.. வருண் காந்திக்கு சீட் இல்லை.. கங்கனாவுக்கு இன்ப அதிர்ச்சி.. பாஜகவின் வேட்பாளர் பட்டியல்..!

Siva
திங்கள், 25 மார்ச் 2024 (06:52 IST)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே நான்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது ஐந்தாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் மேனகா காந்திக்கு சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் வருண் காந்திக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த சில மாதங்களாக பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேனகா காந்திக்கு சுல்தான்பூரில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார் என்பதும் பாஜக விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயார் என்று கூறியிருந்தார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் அவருக்கு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது

தற்போது வெளியான ஐந்தாவது பட்டியலில் மத்திய அமைச்சர்கள் விகே சிங், அஸ்வினி குமார் ஆகியோர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதும் தற்போதைய 37 சிட்டிங் எம்பிக்களுக்கு வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை பாரதிய ஜனதா கட்சி 398 வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்பதும், அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments