Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூர்தர்ஷனில் வேலை வேண்டுமா

தூர்தர்ஷனில் வேலை வேண்டுமா
, வியாழன், 24 செப்டம்பர் 2015 (12:06 IST)
பெங்களூர் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு நீங்கள் இப்போது விண்ணப்பிக்கலாம்
 
இதுபற்றி, பெங்களூரு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “பெங்களூருவில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் காலியாக உள்ள உதவி செய்தி ஆசிரியர், தயாரிப்பாளர், பிரிவு ஆசிரியர், செய்தியாளர், இணையதள உதவி ஆசிரியர், இணையதள உதவியாளர், பின் தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பு உதவியாளர், காணொளி ஆசிரியர், ஒளிப்பதிவாளர், தகவல் உள்ளீடு அலுவலர், சிஜி இயக்குநர், கேமரா உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணிக்கு தேவைப்படும் கல்வித்தகுதி, அனுபவம் போன்ற தகவல்களுக்கு www.ddchandana.gov.in என்ற இணையத்தை அணுகலாம். தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலானது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கன்னடம் சரளமாக பேச தெரிந்திருக்கவேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் கணினியில் ஓரளவு பரிச்சயம் இருக்க வேண்டும். 
 
நீங்கள் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி அக்.26 என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil