Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித் மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (13:05 IST)
உத்தர பிரதேசத்தில் தலித் மாணவன் ஒருவனை ஆசிரியர் ஒருவர் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் அடித்ததால் மாணவன் உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் உள்ள வைஷோலி கிராமத்தை சேர்ந்த தலித் சிறுவன் நிகித் குமார் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான். அவ்வகுப்பின் ஆசிரியர் அஷ்வினி சிங் சமீபத்தில் தேர்வு தாளை திருத்தும்போது மாணவன் தவறாக எழுதியிருந்ததால் அடித்ததாக கூறப்படுகிறது.

ALSO READ: மாணவரை கண்டித்த ஆசிரியர்கள் பணியிடைநீக்கமா? அன்புமணி கண்டனம்!

அஷ்வினி சிங் மூர்க்கமாக அடித்ததில் சிறுவன் நிகித் குமார் மயங்கி விழுந்துள்ளார். இதனால் உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் அஷ்வினி சிங், சிறுவனின் பெற்றோரை சாதிய ரீதியாக திட்டியும் உள்ளார். இந்நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். ஆசிரியரை கண்டித்து போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments