Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து இழுத்த விவகாரம்! – மன்னிப்பு கேட்ட உ.பி போலீஸ்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (08:18 IST)
உத்தர பிரதேசத்தில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு உத்தர பிரதேச போலீஸ் மன்னிப்பு கோரியுள்ளனர்.

உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணின் பெற்றோரை சந்திக்க ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் உத்தர பிரதேசம் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.

பின்னர் மீண்டும் அவர்கள் உத்தர பிரதேசம் சென்றபோது போலீஸார் உள்ளே செல்ல அனுமதித்தனர். முன்னதாக உ.பி உள்ளே செல்ல முயன்றபோது ஏற்பட்ட அமளியில் உ.பி போலீஸார் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த செயலுக்காக உத்தர பிரதேச போலீஸ் பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கோரியுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக தாங்கள் பணி புரிவதாகவும், இதுகுறித்து விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்