Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாள் வேலைக்கு சென்ற பெண் தூக்கில் தொங்கிய சம்பவம்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (15:15 IST)
உத்தர பிரதேசத்தில் புதிதாக கட்டிய மருத்துவமனைக்கு முதல் நாள் வேலைக்கு சென்ற இளம்பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள துல்லாபூர்வா கிராமத்தில் நியூ ஜீவன் என்ற மருத்துவமனை கடந்த 25ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் திகானா கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் நர்ஸ் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பணியில் சேர்ந்த அவர் அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார். அடுத்தநாள் காலை மருத்துவமனையின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீஸார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்