நீதிமன்றத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கறிஞர்! – உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (15:45 IST)
உத்தரபிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் பூபேந்திர சிங் என்பவர் வழக்கு ஒன்று தொடர்பாக சென்றுள்ளார். இந்நிலையில் நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் அவர் இறந்து கிடந்துள்ளார். அவர் அருகே ஒரு நாட்டுத் துப்பாக்கியும் கிடந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது துப்பாக்கி சூடு நடந்தது குறித்து யாருக்கும் அவ்வளவாக தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், வேறு ஒரு நபர் மாடியில் வழக்கறிஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக சொன்னபிறகுதான் சம்பவம் தெரிய வந்து அங்கு சென்றதாக கூறியுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் நீதிமன்றத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

திருப்பதி உண்டியல் எண்ணும் மையத்தில் ரூ.100 கோடி முறைகேடு.. புகார் கொடுத்தவர் மர்ம மரணம்..!

72 மணி நேரம் உழைத்தால் தான் சீனாவுடன் போட்டி போட முடியும்: நாராயண மூர்த்தி

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments