Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்: அமைச்சர் உஷா தாக்கூர்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:02 IST)
பாலியல் குற்றவாளிகளை பகிரங்கமாக பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என மத்திய பிரதேச மாநில அமைச்சர் உஷா தாகூர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்றும் அத்தகைய நபர்களின் இறுதிச் சடங்குகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உஷா தாக்கூர் தெரிவித்துள்ளார்.
 
 தூக்கிலிட்ட பின்னர் குற்றவாளிகளின் உடல்களை கழுகுகளும் காக்கைகளும் கொத்தட்டும் என்றும் இந்த காட்சியை கண்டால்தான் யாரும் பெண் குழந்தைகள் மீது கைவைக்க யாரும் துணிய மாட்டார்கள் என்றும் இதை நான் சமூக நலனுக்காகத்தான் கூறுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
பாலியல் குற்றங்களை பகிரங்கமாக தைரியமாக செய்து வருகிறார்கள் என்றும் அதற்காக சிறை தண்டனையை அனுபவிக்கும் அவர்கள்  தங்கள் குற்றம் குறித்து எந்தவிதமான பயமும் குற்ற உணர்ச்சியும் இல்லை என்றும் அதனால் மரண தண்டனை கொடுத்தால் மட்டுமே பாலியல் குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்