Webdunia - Bharat's app for daily news and videos

Install App

​சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: 15,000 பேர் தேர்ச்சி

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (09:39 IST)
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15,008 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


 
 
ஐஏஎஸ், ஐபிஎஸ், உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் (குடிமை பணி) முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 23ந்தேதி நடைபெற்றது.
 
இதற்காக, 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4.65 லட்சம் பேர் தேர்வை எழுதினர். அதாவது விண்ணப்பித்தவர்களில் 49 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் 15,008 பேர் தேர்ச்சி பெற்றதாக மத்திய பணியாளர் தேர்வாணைய செயலர் ஆஷிம் குரானா தெரிவித்தார்.
 
தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ள முதன்மைத் தேர்வுக்கு, இணையவழியில் விண்ணப்பிக்குமாறு மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments