Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதவையான பெண்; உதவிய மாற்றுத்திறனாளி! – கிராமத்தினர் நடத்திய கொடூரம்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (14:39 IST)
உத்தர பிரதேசத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வேறு ஆணுடன் தொடர்பில் இருந்ததாக கிராமத்தினர் அப்பெண்ணை மொட்டையடித்து கொடுமை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் கனோஜ் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவரின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அவரது மறைவிற்கு பிறகு தனியாக வாழ்ந்த பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் உதவி செய்து வந்துள்ளார். இதை தவறாக புரிந்து கொண்ட பெண்ணின் உறவினர்கள் கிராமத்து மக்களிடன் முறையிட்டுள்ளனர்.

இதனால் பெண்ணின் உறவினர்களும், கிராம மக்களும் சேர்ந்து அந்த பெண்ணையும், மாற்று திறனாளி மனிதரையும் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து மொட்டை அடித்துள்ளனர். பிறகு செருப்பு மாலையை அணிவித்து அவர்களை அடித்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உறவினர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments