Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சூட்டிற்கு முன் கேமராவை உடைத்த போலீஸ்: வெளியானது வீடியோ!

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (11:42 IST)
உத்தர பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் சிசிடிவி கேமராக்களை போலீஸார் உடைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் உத்தர பிரதேசம் மீரட்டில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெறும் முன்னர் சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து பாதுகாப்பு உடைகளை அணிந்து கொள்ளும் போலீஸ்க்காரர்கள் தடியை எடுத்து சிசிடிவி கேமராக்களை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலர் போலீஸ் முன்னரே துப்பாக்கிசூடு குறித்த திட்டங்களோடு வந்திருக்கலாம். ஆதாரம் கிடைக்கக்கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராக்களை உடைத்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments