Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் பிரியாணி விருந்தில் அடிதடி: முதல் பந்தியில் அமர தள்ளுமுள்ளு

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (18:04 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பிரியாணி விருந்து வைத்தபோது அதில் முதல் பந்தியில் அமர தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பயங்கர அடிதடி ஏற்பட்டது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
 
உபி மாநிலம் பிஜ்னோர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நசிமுதீன் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்ட தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூடிய நிலையில் இவர்களுக்காக ஒரு வீட்டில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் பிரியாணி விருந்தில் முதல் பந்தியில் இடம்பிடிக்க காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதில்  கொடிக்கம்புகளை மாற்றிப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கியதில் 7 பேர் மண்டை உடைந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர். கடைசியில் பிரியாணி விருந்து யாருக்கும் கிடைக்காமல் போனதுதான் சோகம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments