Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டெல்லியில் நடந்ததுபோல்தான் உ.பி., பீகார் தேர்தலிலும் நடக்கும்’ - மோடியின் சகோதரர் தாக்கு

Webdunia
புதன், 18 மார்ச் 2015 (13:00 IST)
டெல்லி சட்டமன்ற தேர்தலில் நடந்ததுபோல்தான் உ.பி., பீகார் மாநில சட்டமன்ற தேர்தலிலும் நடக்கும் என்று மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி கூறியுள்ளார்.
 
நேற்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அகில இந்திய நியாய விலைக்கடைகள் கூட்டமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் மோடியும் கலந்து கொண்டார்.
 
நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி
அப்போது பேசிய பிரஹலாத் மோடி, “பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும், பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க தவறிவிட்டது. எங்கள் போராட்டம் இங்கே எடுத்து வரப்பட்டதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தோல்வியே காரணம் ஆகும்.
 
நான் செய்வது எனது சகோதரருக்கு எதிரான புரட்சி அல்ல. என்னை பொறுத்தவரை எனது சகோதரர் மதிப்பு மிக்கவர்தான். அவரை நான் மதிக்கிறேன். எனினும், தொழில் ரீதியாக எனது குரலை சகோதரருக்கு முன்பாக எழுப்ப இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.
 
எங்களுடைய பிரச்சினைகளை பாஜக கண்டு கொள்ளவில்லை எனில் டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் நடந்ததுபோல் தான் உத்தரபிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களிலும் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments