Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2014-15 நிதிநிலை அறிக்கை : 5 புதிய ஐஐடி, ஐஐஎம், அனைத்து மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை - அருண் ஜெட்லி

2014-15  நிதிநிலை அறிக்கை : 5 புதிய ஐஐடி, ஐஐஎம், அனைத்து மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை - அருண் ஜெட்லி
, வியாழன், 10 ஜூலை 2014 (12:03 IST)
2014-2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, புதிதாக 5 ஐஐடி, ஐஐஎம் மற்றும் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அர‌சி‌ன் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தா‌க்க‌ல் செ‌ய்‌து வரு‌கிறா‌ர்.
 
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் அவர், கிராமப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த ரூ. 500 கோடி ஒதுக்கப்படும் எனவும், புதிதாக 5 ஐஐடி, ஐஐஎம் மற்றும் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ், மக்களுக்கு அதிக உற்பத்தி சார்ந்த பணிகளை அளிக்கவும், ஸ்மார்ட் நகரங்களை அமைக்க ரூ. 7060 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் திறனை வளர்க்கவும், அதிகரிக்கவும் தேவையான பயிற்சி அளிக்க ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil