இரண்டு எம்பிக்கள் தகுதிநீக்கம்: துணை ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (09:11 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்கள் இருவரது ராஜ்யசபா எம்பி பதவியை நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லோக்சபா தலைவர் ஆர்.சி.பி.சிங், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தார்

இந்த புகார் மீது விசாரணை நடத்திய துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 10-ன் கீழ் சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகிய இருவரையும் தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்த தகுதிநீக்க அறிவிப்பு நேற்று ராஜ்யசபாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments