Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தராகண்ட் சிறையில் ராம் லீலா நாடகம்: நடித்து கொண்டிருந்தபோதே 2 கைதிகள் தப்பியோட்டம்..!

Mahendran
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:53 IST)
தசரா விழாவை முன்னிட்டு ராம்லீலா நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் ராமன் சீதையைத் தேடிச் செல்லும் காட்சியில் நடிப்பதாக இருந்த இரு கைதிகள் திடீரென தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள சிறையில் நடந்துள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையின் போது கைதிகளை நடிப்பில் ஈடுபடுத்தி, ராம்லீலா நாடகம் நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டும் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நாடகம் நடந்தது. இதில் பல கைதிகள் வில்லனாகவும் ஹீரோவாகவும் வேடமிட்டு நடித்தனர். குறிப்பாக, ராமன் சீதையைத் தேடி செல்லும் காட்சியில் நடிக்கும்போது, இரு கைதிகள் திடீரென நாடகத்திலிருந்து பின்வாங்கி, சிறையிலிருந்து தப்பியோடினர்.

இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிறையின் சுவர் ஏறிச் சென்று வெற்றிகரமாக தாண்டியது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த கைதிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சிறை நிர்வாகம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த அலட்சியத்திற்கு காரணமான சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments