Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவிகளின் சீருடைகளை அகற்றிய பள்ளி நிர்வாகம்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (15:34 IST)
பீகார் மாநிலத்தில் கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவிகளின் சீருடைகளை பள்ளி நிர்வாகத்தினர் அகற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



 

 
பீகார் மாநிலத்தில் பெகுசராய் என்ற பகுதியைச் சேர்ந்த ஜுன்ஜுன்ஷா என்பவர் தனது இரண்டு மகள்களையும் தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். அவர் இந்த மாதம் செலுத்த வேண்டிய பள்ளி கட்டணத்தை செலுத்தவில்லை. 
 
மாலை ஜுன்ஜுன்ஷா தனது மகள்களை அழைக்க பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி கட்டணத்தை செலுத்திவிட்டு மகள்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்ப மறுத்துள்ளனர். தன்னிடம் தற்போது பணம் இல்லை, சிறிது காலம் அவகாசம் கொடுங்கள் என்று ஜுன்ஜுன்ஷா கேட்டுள்ளார்.
 
இதற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி கட்டணத்தை செலுத்தாவிட்டால் எங்கள் பள்ளி சீருடையை அணியக்கூடாது என கூறி சீருடைகளை அகற்றியுள்ளனர். ஜுன்ஜுன்ஷா வேறு வழியில்லாமல் அவரது மகள்களை அப்படியே வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்த காட்சிகளை சிலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 
 
இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டது. பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியை ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அசோக்சவுத்ரி தெரிவித்துள்ளார்.

 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments