Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபேக் ராகுல் & கோபேக் பப்பு – டிவிட்டர் களேபரம் ஆரம்பம் !

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (09:06 IST)
இன்று தமிழகம் வரவுள்ள ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோபேக் ராகுல் மற்றும் கோபேக் பப்பு ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரண்டிங்கில் உள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். ஆனால் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோபேக் ராகுல் மற்றும் கோபேக் பப்பு ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரண்ட் ஆக ஆரம்பித்துள்ளன. ஆனால் இந்த டிவிட்களில் பெரும்பாலானவை வட இந்திய மாநிலங்களில் இருந்து பதியப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிராகக் கருப்புக்கொடிக் காட்டுவதும் சமூக வலைதளங்களில் கோபேக் மோடி எனும் ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்வதும் சமீபகாலமாக நடந்து வருகின்றது. சமீபத்தில் மூன்று முறை அவர் தமிழகம் வந்தபோதும் இது நடந்தேறியது. தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட சில வட மாநிலங்களிலும் மோடிக்கு எதிர்ப்பாக கருப்புக்கொடி காட்டுதல் மற்றும் சமூக வலைதளங்களில் ஹேஷேடேக் உருவாக்குதல் ஆகியவை நடந்து வருகின்றன. இதற்காக பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு நிற உடை மற்றும் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாஜக இதையெல்லாம் பாகிஸ்தான் சதி எனக் கூறி மழுப்பியது.

அதனால் இப்போது ராகுல் வரும் போது அதுபோன்ற ஹேஷ்டேக்குகளை மீண்டும் உருவாக்கி ராகுலுக்கும் தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பது போன்ற தோரணையை உருவாக்கவே பாஜக இந்த வேலையில் இறங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments