Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சி தொகுப்பாளினியை கணவரே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (07:28 IST)
தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்த அனிதா சிங் என்ற இளம் பெண்ணை அவரது கணவரே கொலை செய்து உடலை எரித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து கொண்டிருந்தவர் அனிதா சிங். 9 வயதான அனிதா இன்னொருவனுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக அவர் கணவர் ரவீந்தர் பால் சிங் என்பவர் சந்தேகம் கொண்டதாகவும், இதனால் உயிருடன் அனிதாவை தீ வைத்து எரித்துவிட்டதாகவும் தெரிகிறது
 
முழுவதும் தீயில் கருகி உருக்குலைந்த நிலையில் இருந்த அனிதாவின் உடலை நைனிடால் பகுதியில் இருந்து போலீசார் மீட்டு அதன் பின்னர் விசாரணை நடத்தியதில் அவரது கணவரே கொலை செய்தது தெரிய வந்தது
 
இதுகுறித்து ரவீந்தர் கொடுத்த வாக்குமூலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி மனைவியை நைனிடால் என்ற பகுதியில் உள்ள குல்தீப் என்ற நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பின்னர்  நண்பனின் உதவியுடன் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், பின்னர் இருவரும் நள்ளிரவில் அனிதாவின் உடலை காட்டுக்கு கொண்டு சென்று எரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரவீந்தர் மீதும் அவரது நண்பர் மீதும் போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments