Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதியில் 1 கோடி லட்டு விற்பனை

திருப்பதியில் 1 கோடி லட்டு விற்பனை
, செவ்வாய், 7 ஜூன் 2016 (21:49 IST)
திருப்பதியில் மே மாதத்தில் மட்டும் 1 கோடி லட்டுகள்  விற்பனை ஆகியுள்ளது வரலாற்றுச் சாதனையாகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 


 
கோடை விடுமுறையில் பக்தர்களின் வரவு எப்போதும் அதிக அளவில் இருக்கும். அதுவும் தேர்வு முடிவுகள் வெளியாகியதோடு கடந்த 3 வாரங்களாக அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
 
மானிய விலையில் ரூ.20-க்கு வழங்கப்பட்ட 2 லட்டுகள், பாதயாத்திரையாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு லட்டு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தையுடன் வரும் பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகள், கூடுதல் லட்டாக ரூ.50-க்கும் 2 லட்டுகள், ரூ.100-க்கும் 4 லட்டுகள் என மொத்தமாக பக்தர்களுக்கு 1 கோடிக்கு மேல் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த மே மாதம் 28-ந்தேதி மட்டும் ஒரேநாளில் 4 லட்சத்து 5 ஆயிரம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2013ஆம் ஆண்டு சுமார் 72 லட்சம் லட்டு விற்பனை ஆனதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதை முறியடித்து 1 கோடிக்கு மேல் லட்டு விற்பனை ஆனது வரலாற்றுச் சாதனை என்று கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணினி அறிவில்லாத 25 இந்திய மாணவர்கள் கெட் அவுட்