சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் அனுமதியா? – திருப்பதில் பக்தர்கள் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (10:03 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்காததை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதால் பரபரப்பு எழுந்தது.

தற்போது மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது வீரியமிக்க கொரோனா பரவும் அபாயமும் உள்ளதால் ஜனவரி 3 வரை திருப்பதியில் இலவச தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டு சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏமாற்றமடைந்த இலவச தரிசன பக்தர்கள் பலர் திருப்பதியின் சாலைகளில் அமர்ந்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

அடுத்த கட்டுரையில்
Show comments