Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் தொடரும் கனமழை: போக்குவரத்து பாதிப்பு!!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (19:37 IST)
மும்பையில் தொடரும் கனமழையால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.


 
 
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. கனமழை விளைவால் பல்வேறு பகுதிகளில் சாலையில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
 
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தொடர் மழையால் ரயில் மற்றும் விமான சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
சத்ரபதி சிவாஜி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
 
மேலும், மும்பை வரும் 56 விமானங்கள் கோவா, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன.
 
இதே போல் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரயில்கள் குறைவாகவே இயக்கப்பட்டு வருகின்றன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

சிறையில் ஒரு மாதம்.. இதுவரை யாரும் சந்திக்க வரவில்லை.. சோனம் சிறை வாழ்க்கை..!

ரூ.20,000ல் சாம்சங் வெளியிடும் புதிய மொபைல் போன்.. அசத்தலான அம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments