25 திருநங்கைகள் கூட்டாக பினாயில் குடித்து தற்கொலை முயற்சி. அதிர்ச்சி சம்பவம்..!

Siva
வியாழன், 16 அக்டோபர் 2025 (12:11 IST)
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஒரு திருநங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, 25 திருநங்கைகள் ஒரே நேரத்தில் ஃபினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
பங்கஜ் மற்றும் அக்ஷய் என்ற இரண்டு ஆண்களால் ஒரு திருநங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றவாளிகள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
இதை கண்டித்து, 25 திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து ஃபினாயில் திரவத்தை குடித்துள்ளனர்.தற்கொலைக்கு முயன்ற 25 திருநங்கைகளும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  தற்போது அனைவரும் ஆபத்தில் இருந்தும் மீண்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்துக் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளான பங்கஜ் மற்றும் அக்ஷய் ஆகிய இருவரையும் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை.. மொத்த மதிப்பு ரூ.9.5 கோடி..!

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்