நாளை வாக்கு எண்ணிக்கை எதிரொலி: போக்குவரத்தில் திடீர் மாற்றம்;

Webdunia
புதன், 22 மே 2019 (11:44 IST)
நாடு முழுவதும் நாளை மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. நாளை இரவுக்குள் அடுத்த ஆட்சியை அமைப்பது யார்? என்பது தெரிந்துவிடும்
 
இந்த நிலையில் புதுச்சேரி பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்படுகிறது. இதனையடுத்து லாஸ்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஏர்போர்ட் சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல் நாவலர் நெடுஞ்செழியன் மேல்பள்ளி சாலை முதல் நாவற்குளம் சந்திப்பு வரையிலும்,  வள்ளலார் சாலையில் இருந்து உழவர்சந்தை வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் போக்குவரத்து தடை இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் எண்ணிக்கை முடியும் வரை அமலில் இருக்கும் என்றும், எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாற்றுபாதையை பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீசார்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கைது.. ஜாமீன் மறுப்பால் சிறையில் அடைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments