Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்போஸிஸ் பெண் ஊழியர் மர்ம மரணம்: தடயத்தை விட்டுசென்ற கொலையாளி!!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (15:02 IST)
புனேவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த மென்பொறியாளர் ரசிலா. இந்நிலையில், தான் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலகத்துக்குள்ளேயே கம்ப்யூட்டர் ஒயரால் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
 
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ரசிலா 5 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது.
 
அப்போது அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த அசாமைச் சேர்ந்த காவலர் பபென் செயில்சியா (26) மற்றொரு பாதுகாவலர் பணிக்கு வந்ததும், மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து கிளம்பியுள்ளார். 
 
ரசிலா கொலை செய்யப்பட்டது இரவு 8 மணியளவில் தான் தெரிய வந்தது. அதன்பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அலுவலகத்துக்குள் பபென் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
காவல் துறையினர் பபென் இருப்பிடத்திற்கு செல்வதற்குள் அவன் புனேவை விட்டு தப்பிவிட்டார். உடனடியாக காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தொடர்ந்து சென்று கைது செய்தனர். 
 
ஆனால், பபெனிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments