Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சுறுத்தலால் தாஜ் மஹாலுக்கு வந்த சோதனை..

Arun Prasath
வியாழன், 5 மார்ச் 2020 (12:52 IST)
கொரோனா வைரஸ் இந்தியாவில் 29 பேருக்கு பரவியுள்ள நிலையில், தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குறைந்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தென் கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

இதனிடையே இந்தியாவில் தற்போது 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆக்ராவில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதால் தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பீகார் மாநிலம் போத் கயா போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் முதலாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளாவில் சுற்றுலா மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments