விஜய் மல்லையா, நீரவ் மோடி தெரியும், மீதி 29 பேர் யார் யார்?

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (15:52 IST)
இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகிய இருவரையும் எப்போது இந்தியாவுக்கு அழைத்து வந்து, எப்போது விசாரணை செய்து எப்போது அவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவது என்ற கேள்விக்கே பதில் இல்லாமல் அரசு திணறி வருகிறது

இந்த நிலையில் இவர்கள் இருவர் மட்டுமின்றி மொத்தம் 31 பேர் இதேபோல் மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக  மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது

விஜய் மல்லையா, நீரவ் மோடி, அவரது மனைவி, ஆமி மோடி, மகன் நீஷல் மோடி, மெஹூல் சோக்சி, லலித் மோடி, சஞ்சய் பண்டாரி, சுணில் ரமேஷ் ரூபானி, எம்.ஜி. சந்திரசேகர் ஆகியோர்கள் உள்பட மொத்தம் 31 பேர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளவர்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்கள் செய்த மோசடி எவ்வளவு, எப்போது இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்ற விபரத்தை அமைச்சர் அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments