Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த உதவிக்கு டோல் ஃப்ரீ நம்பர்?

டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த உதவிக்கு டோல் ஃப்ரீ நம்பர்?
, திங்கள், 12 டிசம்பர் 2016 (18:06 IST)
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கிவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்காக மத்திய அரசு இலவச உதவி எண்ணை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அறிவித்தை தொடர்ந்து நாடு முழுவதும் பணம் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசு அனைவரையும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய ஊக்கிவித்து வருகிறது.
 
இதற்காக டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான உதவிக்கு 14444 என்ற இலவச உதவி எண்ணை அறிமுகப்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இலவச உதவி எண் மூலம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு உதவி அளிக்கப்படும் என்று தெர்விக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரையை கடக்கும் வர்தா புயல் - கனமழை பெய்யும்