Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாய்லெட்டில் சமைப்பதில் என்ன தவறு? பெண் அமைச்சரால் வெடித்தது சர்ச்சை!

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (10:24 IST)
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை என அமைச்சர் இமார்த்தி தேவி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவபுரி மாவட்டம் கரோரா என்னும் ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் உணவு சமைப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாருக்கு வருந்தாமல் மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி இதில் தவறில்லை என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
உணவு சமைக்க பயன்படும் பாத்திரம் கழிவறை மேல், சிலிண்டர் மற்றும் ஸ்டவ் கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது என புகார் எழுந்த நிலையில், அமைச்சர் இமார்த்தி தேவி அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை என தெரிவித்துள்ளார். 
மேலும், வீட்டில் குளியலறையும் கழிவறையும் இருப்பதால் உறவினர்கள் தங்களது வீட்டில் சாப்பிட மறுப்பார்களா? குளியறையில் பாத்திரம் வைக்கலாம். அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கும் சமைக்கும் இடத்திற்கும் இடைவெளி உள்ளது. இருப்பினும் இது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெருவதாக அவர் கூறினாலும், கழிவறையில் சமைப்பதில் தவறில்லை என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments