Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமி

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (07:37 IST)
ராஜஸ்தானில் ஆழ்குழாய்க்கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.


 
 
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் உள்ள பிகரிபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இரண்டு வயதுடைய ஜோதி நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அருகில் இருந்த ஆழ்குழாய்க் கிணறு திறந்த நிலையில் இருந்ததை கவனிக்காத ஜோதி. அதில் கால் இடறி உள்ளே விழுந்தார்.  இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், ஆழ்குழாய் கிணற்றின் அருகே மிகப்பெரிய பள்ளத்தை தோண்டி குழந்தையை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையும் ஈடுபட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குள் குழந்தை ஜோதி மீட்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Show comments