Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி!

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (08:47 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சமாதியில் இன்று சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவரால் கொல்லப்பட்டார். இதுகுறித்த வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் டெல்லியில் அனுசரிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் மட்டுமின்றி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினர்
 
அதேபோல் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இன்று காலை தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments